பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.
மு.வரதராசனார் உரை:
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
பரிமேலழகர் உரை:
(ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை – காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் – இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது. (குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி – உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. ‘அதனால் பயன் ஆற்றுமாறு என்னை’? என்பது குறிப்பெச்சம்.).
உரை:
பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.
மணக்குடவர் உரை:
நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது. இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமுற்று பசந்துவந்த மாலைப் பொழுது இந்நாள் எனக்கு உயிர்வாழ்வதில் வெறுப்புண்டாக்கித் துன்பம் ஒரு காலைக் கொருகால் மிகுதியாகுமாறு வருகின்றது.
Transliteration:
paniarumpip paidhalkol maalai thuniarumpith
thunpam valara varum
Translation:
With buds of chilly dew wan evening’s shade enclose;
My anguish buds space and all my sorrow grows.
Explanation:
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow.
மறுமொழி இடவும்