யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
மு.வரதராசனார் உரை:
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே – எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் – அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ? (ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. ‘உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?’ என்பது கருத்து.).
உரை:
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?.
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?.
மணக்குடவர் உரை:
அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ: எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராகா நின்றார். ஓஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என்னும் பொருளதாயிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எம்முடைய நெஞ்சத்தில் காதலர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றார். அதுபோலவே அவருடைய நெஞ்சத்தில் நாமும் இருந்துகொண்டு இருக்கிறோமோ?.
Transliteration:
yaamum ulaengol avarnenjaththu en-nenjaththu
ohoh ulare avar
Translation:
Have I a place within his heart!
From mine, alas! he never doth depart.
Explanation:
He continues to abide in my soul, do I likewise abide in his ?.
மறுமொழி இடவும்