நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
மு.வரதராசனார் உரை:
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.
பரிமேலழகர் உரை:
நாணாமை – நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை – நாடவேண்டுமவற்றை நாடாமையும்; நார் இன்மை – யாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை – பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் – பேதையது தொழில். (நாணவேண்டுபவை – பழி பாவங்கள். நாடவேண்டுபவை – கருமங்களில் செய்வன தவிர்வன. முறிதல்: கண்ணுறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் ‘தொழில்’ என்றார்.).
உரை:
வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.
மணக்குடவர் உரை:
நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில். இது பேதையார்செயல் கூறிற்று.
Transliteration:
naaNaamai naadaamai naarinmai yaadhondrum
paeNaamai paedhai thozhil
Translation:
Ashamed of nothing, searching nothing out, of loveless heart,
Nought cherishing, ’tis thus the fool will play his part.
Explanation:
Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.
மறுமொழி இடவும்