• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar

Thirukkural

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்
Home » படைமாட்சி » குறள் 707

குறள் 707

By Thiruvalluvar Leave a Comment

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.

மு.வரதராசனார் உரை:

ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.

பரிமேலழகர் உரை:

உவப்பினும் காயினும் தான் முந்துறும் – உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ – முகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை. (‘உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை’ என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், ‘உண்டு’ என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?.

மணக்குடவர் உரை:

முகம்போல முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும். குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.

Transliteration:

mukaththin mudhukkuRaindhadhu undoa uvappinum
kaayinum thaanmunh thuRum

Translation:

Than speaking countenance hath aught more prescient skill?
Rejoice or burn with rage, ’tis the first herald still!.

Explanation:

Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.

Filed Under: குறிப்பறிதல் - பொருட்பால்

Reader Interactions

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Primary Sidebar

பால்

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்

இயல்

  • அறத்துப்பால்
    • பாயிரவியல்
    • இல்லறவியல்
    • துறவறவியல்
    • ஊழியல்
  • பொருட்பால்
    • அரசியல்
    • அமைச்சியல்
    • அரணியல்
    • கூழியல்
    • படையில்
    • நட்பியல்
    • குடியியல்
  • காமத்துப்பால்
    • களவியல்
    • கற்பியல்

அதிகாரம்

  • அடக்கமுடைமை
  • அன்புடைமை
  • அமைச்சு
  • அரண்
  • அருளுடைமை
  • அறன்வலியுறுத்தல்
  • அறிவுடைமை
  • அலரறிவுறுத்தல்
  • அழுக்காறாமை
  • அவர்வயின்விதும்பல்
  • அவாவறுத்தல்
  • அவையஞ்சாமை
  • அவையறிதல்
  • ஆள்வினையுடைமை
  • இகல்
  • இடனறிதல்
  • இடுக்கணழியாமை
  • இனியவைகூறல்
  • இன்னாசெய்யாமை
  • இரவச்சம்
  • இரவு
  • இறைமாட்சி
  • இல்வாழ்க்கை
  • ஈகை
  • உட்பகை
  • உறுப்புநலனழிதல்
  • உழவு
  • ஊக்கமுடைமை
  • ஊடலுவகை
  • ஊழ்
  • ஒப்புரவறிதல்
  • ஒற்றாடல்
  • ஒழுக்கமுடைமை
  • கடவுள் வாழ்த்து
  • கண்ணோட்டம்
  • கண்விதுப்பழிதல்
  • கனவுநிலையுரைத்தல்
  • கயமை
  • கல்லாமை
  • கல்வி
  • கள்ளாமை
  • கள்ளுண்ணாமை
  • காதற்சிறப்புரைத்தல்
  • காலமறிதல்
  • குடிசெயல்வகை
  • குடிமை
  • குறிப்பறிதல் – காமத்துப்பால்
  • குறிப்பறிதல் – பொருட்பால்
  • குறிப்பறிவுறுத்தல்
  • குற்றங்கடிதல்
  • கூடாநட்பு
  • கூடாவொழுக்கம்
  • கேள்வி
  • கொடுங்கோன்மை
  • கொல்லாமை
  • சான்றாண்மை
  • சிற்றினஞ்சேராமை
  • சுற்றந்தழால்
  • சூது
  • செங்கோன்மை
  • செய்ந்நன்றி அறிதல்
  • சொல்வன்மை
  • தகையணங்குறுத்தல்
  • தனிப்படர்மிகுதி
  • தவம்
  • தீ நட்பு
  • தீவினையச்சம்
  • துறவு
  • தூது
  • தெரிந்துசெயல்வகை
  • தெரிந்துதெளிதல்
  • தெரிந்துவினையாடல்
  • நடுவு நிலைமை
  • நட்பாராய்தல்
  • நட்பு
  • நன்றியில்செல்வம்
  • நலம்புனைந்துரைத்தல்
  • நல்குரவு
  • நாடு
  • நாணுடைமை
  • நாணுத்துறவுரைத்தல்
  • நினைந்தவர்புலம்பல்
  • நிறையழிதல்
  • நிலையாமை
  • நீத்தார் பெருமை
  • நெஞ்சொடுகிளத்தல்
  • நெஞ்சொடுபுலத்தல்
  • பகைத்திறந்தெரிதல்
  • பகைமாட்சி
  • பசப்புறுபருவரல்
  • படர்மெலிந்திரங்கல்
  • படைச்செருக்கு
  • படைமாட்சி
  • பண்புடைமை
  • பயனில சொல்லாமை
  • பழைமை
  • பிரிவாற்றாமை
  • பிறனில் விழையாமை
  • புகழ்
  • புணர்ச்சிமகிழ்தல்
  • புணர்ச்சிவிதும்பல்
  • புறங்கூறாமை
  • புலவி
  • புலவி நுணுக்கம்
  • புலான்மறுத்தல்
  • புல்லறிவாண்மை
  • பெண்வழிச்சேறல்
  • பெரியாரைத் துணைக்கோடல்
  • பெரியாரைப் பிழையாமை
  • பெருமை
  • பேதைமை
  • பொச்சாவாமை
  • பொருள்செயல்வகை
  • பொறையுடைமை
  • பொழுதுகண்டிரங்கல்
  • மக்கட்பேறு
  • மடியின்மை
  • மன்னரைச் சேர்ந்தொழுதல்
  • மருந்து
  • மானம்
  • மெய்யுணர்தல்
  • வரைவின்மகளிர்
  • வலியறிதல்
  • வான்சிறப்பு
  • வாய்மை
  • வாழ்க்கைத் துணைநலம்
  • வினைசெயல்வகை
  • வினைத்திட்பம்
  • வினைத்தூய்மை
  • விருந்தோம்பல்
  • வெஃகாமை
  • வெகுளாமை
  • வெருவந்தசெய்யாமை

Website Developed, Designed and Maintained by Sa.GokulDeepak (SaGo)