• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar

Thirukkural

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்
Home » குறிப்பறிதல் - பொருட்பால் » குறள் 656

குறள் 656

By Thiruvalluvar Leave a Comment

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

மு.வரதராசனார் உரை:

பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

பரிமேலழகர் உரை:

ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் – தன்னைப் பயந்தாளது பசியை வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்; சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க – அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக. (‘இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக’ என்னும் அறநூற்பொது விதி, பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியராதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமை பற்றி, இவ்வாறு கூறினார். இவை ஐந்து பாட்டானும், ‘பாவமும் பழியும் பயக்கும் வினை செய்யற்க’ என்பது கூறப்பட்டது.).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

மணக்குடவர் உரை:

தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும் சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக. இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க என்றது.

Transliteration:

eendraaL pasikaaNpaan aayinunhj seyyaRka
saandroar pazhikkum vinai

Translation:

Though her that bore thee hung’ring thou behold, no deed
Do thou, that men of perfect soul have crime decreed.

Explanation:

Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).

Filed Under: வினைத்தூய்மை

Reader Interactions

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Primary Sidebar

பால்

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்

இயல்

  • அறத்துப்பால்
    • பாயிரவியல்
    • இல்லறவியல்
    • துறவறவியல்
    • ஊழியல்
  • பொருட்பால்
    • அரசியல்
    • அமைச்சியல்
    • அரணியல்
    • கூழியல்
    • படையில்
    • நட்பியல்
    • குடியியல்
  • காமத்துப்பால்
    • களவியல்
    • கற்பியல்

அதிகாரம்

  • அடக்கமுடைமை
  • அன்புடைமை
  • அமைச்சு
  • அரண்
  • அருளுடைமை
  • அறன்வலியுறுத்தல்
  • அறிவுடைமை
  • அலரறிவுறுத்தல்
  • அழுக்காறாமை
  • அவர்வயின்விதும்பல்
  • அவாவறுத்தல்
  • அவையஞ்சாமை
  • அவையறிதல்
  • ஆள்வினையுடைமை
  • இகல்
  • இடனறிதல்
  • இடுக்கணழியாமை
  • இனியவைகூறல்
  • இன்னாசெய்யாமை
  • இரவச்சம்
  • இரவு
  • இறைமாட்சி
  • இல்வாழ்க்கை
  • ஈகை
  • உட்பகை
  • உறுப்புநலனழிதல்
  • உழவு
  • ஊக்கமுடைமை
  • ஊடலுவகை
  • ஊழ்
  • ஒப்புரவறிதல்
  • ஒற்றாடல்
  • ஒழுக்கமுடைமை
  • கடவுள் வாழ்த்து
  • கண்ணோட்டம்
  • கண்விதுப்பழிதல்
  • கனவுநிலையுரைத்தல்
  • கயமை
  • கல்லாமை
  • கல்வி
  • கள்ளாமை
  • கள்ளுண்ணாமை
  • காதற்சிறப்புரைத்தல்
  • காலமறிதல்
  • குடிசெயல்வகை
  • குடிமை
  • குறிப்பறிதல் – காமத்துப்பால்
  • குறிப்பறிதல் – பொருட்பால்
  • குறிப்பறிவுறுத்தல்
  • குற்றங்கடிதல்
  • கூடாநட்பு
  • கூடாவொழுக்கம்
  • கேள்வி
  • கொடுங்கோன்மை
  • கொல்லாமை
  • சான்றாண்மை
  • சிற்றினஞ்சேராமை
  • சுற்றந்தழால்
  • சூது
  • செங்கோன்மை
  • செய்ந்நன்றி அறிதல்
  • சொல்வன்மை
  • தகையணங்குறுத்தல்
  • தனிப்படர்மிகுதி
  • தவம்
  • தீ நட்பு
  • தீவினையச்சம்
  • துறவு
  • தூது
  • தெரிந்துசெயல்வகை
  • தெரிந்துதெளிதல்
  • தெரிந்துவினையாடல்
  • நடுவு நிலைமை
  • நட்பாராய்தல்
  • நட்பு
  • நன்றியில்செல்வம்
  • நலம்புனைந்துரைத்தல்
  • நல்குரவு
  • நாடு
  • நாணுடைமை
  • நாணுத்துறவுரைத்தல்
  • நினைந்தவர்புலம்பல்
  • நிறையழிதல்
  • நிலையாமை
  • நீத்தார் பெருமை
  • நெஞ்சொடுகிளத்தல்
  • நெஞ்சொடுபுலத்தல்
  • பகைத்திறந்தெரிதல்
  • பகைமாட்சி
  • பசப்புறுபருவரல்
  • படர்மெலிந்திரங்கல்
  • படைச்செருக்கு
  • படைமாட்சி
  • பண்புடைமை
  • பயனில சொல்லாமை
  • பழைமை
  • பிரிவாற்றாமை
  • பிறனில் விழையாமை
  • புகழ்
  • புணர்ச்சிமகிழ்தல்
  • புணர்ச்சிவிதும்பல்
  • புறங்கூறாமை
  • புலவி
  • புலவி நுணுக்கம்
  • புலான்மறுத்தல்
  • புல்லறிவாண்மை
  • பெண்வழிச்சேறல்
  • பெரியாரைத் துணைக்கோடல்
  • பெரியாரைப் பிழையாமை
  • பெருமை
  • பேதைமை
  • பொச்சாவாமை
  • பொருள்செயல்வகை
  • பொறையுடைமை
  • பொழுதுகண்டிரங்கல்
  • மக்கட்பேறு
  • மடியின்மை
  • மன்னரைச் சேர்ந்தொழுதல்
  • மருந்து
  • மானம்
  • மெய்யுணர்தல்
  • வரைவின்மகளிர்
  • வலியறிதல்
  • வான்சிறப்பு
  • வாய்மை
  • வாழ்க்கைத் துணைநலம்
  • வினைசெயல்வகை
  • வினைத்திட்பம்
  • வினைத்தூய்மை
  • விருந்தோம்பல்
  • வெஃகாமை
  • வெகுளாமை
  • வெருவந்தசெய்யாமை

Website Developed, Designed and Maintained by Sa.GokulDeepak (SaGo)