அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
மு.வரதராசனார் உரை:
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.
பரிமேலழகர் உரை:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் – தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினையுடையானது பெரிய செல்வம், பேய் கண்டன்னது உடைத்து – பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து.
(எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின, இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பது பற்றிப் ‘பேய் கண்டன்னது உடைத்து’ என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.).
உரை:
யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.
மணக்குடவர் உரை:
காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து.
இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது.
Transliteration:
arunjevvi innaa mukaththaan perunjelvam
paeeykaN dannadhu udaiththu
Translation:
Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon’s glance.
Explanation:
The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.
மறுமொழி இடவும்