பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
மு.வரதராசனார் உரை:
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
பரிமேலழகர் உரை:
பெருமை உடையவர் – அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் – தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர். (‘வறியராய வழியும்’ என்பது முன் செய்து போந்தமை தோன்றப் ‘பெருமை உடையவர்’ என்றதனானும், ‘ஆற்றுவார’¢ என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.).
உரை:
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
மணக்குடவர் உரை:
பெருமையாவது செருக்கின்மை: சிறுமை செருக்கினை மேற்கொண்டொழுகுதலான். மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென்றார். இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச்செருக்கின்மை பெருமையென்று கூறினார்.
Transliteration:
perumai yudaiyavar aatruvaar aatrin
arumai udaiya seyal
Translation:
The man endowed with greatness true,
Rare deeds in perfect wise will do.
Explanation:
(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).
மறுமொழி இடவும்