பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
மு.வரதராசனார் உரை:
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் – இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க – என் மேனி பட்டதுபடப் பசப்பதாக. (நன்னிலையராதல் – நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். ‘பட்டாங்காக’ என ஆக்கம் விரித்து உரைக்க. ‘முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்’? என்பதுபட நின்றமையின், ‘மன்’ ஒழியிசைக்கண் வந்தது.).
உரை:
பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!.
சாலமன் பாப்பையா உரை:
இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.
மணக்குடவர் உரை:
என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின். இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இந்தப் பிரிவை நான் உடன்படும் முறையில் சொன்ன தலைவர் நல்ல நிலையில் இருந்து வருவாரானால் என் உடம்பு பசப்பு நிறம் அடைந்தே இருக்கட்டும்.
Transliteration:
pasakkaman pattaangen maeni nayappiththaar
nannilaiyar aavar enin
Translation:
Well! let my frame, as now, be sicklied o’er with pain,
If he who won my heart’s consent, in good estate remain!.
Explanation:
If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.
மறுமொழி இடவும்