• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar

Thirukkural

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்
Home » மெய்யுணர்தல் » குறள் 341

குறள் 341

By Thiruvalluvar Leave a Comment

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

மு.வரதராசனார் உரை:

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

பரிமேலழகர் உரை:

[அஃதாவது, புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய யாக்கையின்கண்ணும் உளதாம் பற்றினை, அவற்றது நிலையாமை நோக்கி, விடுதல், அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

யாதனின் யாதனின் நீங்கியான் – ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அதனின் அதனின் நோதல் இலன் – அவன் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன். (அடுக்குகள் பன்மை குறித்து நின்றன. நீங்குதல் – துறத்தல். ஈண்டுத்துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலை, அஃதன்றி ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.).

உரை:

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

மணக்குடவர் உரை:

எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான் அவன் அதனளவு துன்பமுறுதலிலன்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் பற்றற்று நீங்கினானோ அவன் அந்தந்தப் பொருளால் வரும் துன்பத்தினையடைதலை இல்லையாவான்.

Transliteration:

yaadhanin yaadhanin neengiyaan noadhal
adhanin adhanin ilan

Translation:

From whatever, aye, whatever, man gets free,
From what, aye, from that, no more of pain hath he!.

Explanation:

Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

Filed Under: துறவு

Reader Interactions

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Primary Sidebar

பால்

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்

இயல்

  • அறத்துப்பால்
    • பாயிரவியல்
    • இல்லறவியல்
    • துறவறவியல்
    • ஊழியல்
  • பொருட்பால்
    • அரசியல்
    • அமைச்சியல்
    • அரணியல்
    • கூழியல்
    • படையில்
    • நட்பியல்
    • குடியியல்
  • காமத்துப்பால்
    • களவியல்
    • கற்பியல்

அதிகாரம்

  • அடக்கமுடைமை
  • அன்புடைமை
  • அமைச்சு
  • அரண்
  • அருளுடைமை
  • அறன்வலியுறுத்தல்
  • அறிவுடைமை
  • அலரறிவுறுத்தல்
  • அழுக்காறாமை
  • அவர்வயின்விதும்பல்
  • அவாவறுத்தல்
  • அவையஞ்சாமை
  • அவையறிதல்
  • ஆள்வினையுடைமை
  • இகல்
  • இடனறிதல்
  • இடுக்கணழியாமை
  • இனியவைகூறல்
  • இன்னாசெய்யாமை
  • இரவச்சம்
  • இரவு
  • இறைமாட்சி
  • இல்வாழ்க்கை
  • ஈகை
  • உட்பகை
  • உறுப்புநலனழிதல்
  • உழவு
  • ஊக்கமுடைமை
  • ஊடலுவகை
  • ஊழ்
  • ஒப்புரவறிதல்
  • ஒற்றாடல்
  • ஒழுக்கமுடைமை
  • கடவுள் வாழ்த்து
  • கண்ணோட்டம்
  • கண்விதுப்பழிதல்
  • கனவுநிலையுரைத்தல்
  • கயமை
  • கல்லாமை
  • கல்வி
  • கள்ளாமை
  • கள்ளுண்ணாமை
  • காதற்சிறப்புரைத்தல்
  • காலமறிதல்
  • குடிசெயல்வகை
  • குடிமை
  • குறிப்பறிதல் – காமத்துப்பால்
  • குறிப்பறிதல் – பொருட்பால்
  • குறிப்பறிவுறுத்தல்
  • குற்றங்கடிதல்
  • கூடாநட்பு
  • கூடாவொழுக்கம்
  • கேள்வி
  • கொடுங்கோன்மை
  • கொல்லாமை
  • சான்றாண்மை
  • சிற்றினஞ்சேராமை
  • சுற்றந்தழால்
  • சூது
  • செங்கோன்மை
  • செய்ந்நன்றி அறிதல்
  • சொல்வன்மை
  • தகையணங்குறுத்தல்
  • தனிப்படர்மிகுதி
  • தவம்
  • தீ நட்பு
  • தீவினையச்சம்
  • துறவு
  • தூது
  • தெரிந்துசெயல்வகை
  • தெரிந்துதெளிதல்
  • தெரிந்துவினையாடல்
  • நடுவு நிலைமை
  • நட்பாராய்தல்
  • நட்பு
  • நன்றியில்செல்வம்
  • நலம்புனைந்துரைத்தல்
  • நல்குரவு
  • நாடு
  • நாணுடைமை
  • நாணுத்துறவுரைத்தல்
  • நினைந்தவர்புலம்பல்
  • நிறையழிதல்
  • நிலையாமை
  • நீத்தார் பெருமை
  • நெஞ்சொடுகிளத்தல்
  • நெஞ்சொடுபுலத்தல்
  • பகைத்திறந்தெரிதல்
  • பகைமாட்சி
  • பசப்புறுபருவரல்
  • படர்மெலிந்திரங்கல்
  • படைச்செருக்கு
  • படைமாட்சி
  • பண்புடைமை
  • பயனில சொல்லாமை
  • பழைமை
  • பிரிவாற்றாமை
  • பிறனில் விழையாமை
  • புகழ்
  • புணர்ச்சிமகிழ்தல்
  • புணர்ச்சிவிதும்பல்
  • புறங்கூறாமை
  • புலவி
  • புலவி நுணுக்கம்
  • புலான்மறுத்தல்
  • புல்லறிவாண்மை
  • பெண்வழிச்சேறல்
  • பெரியாரைத் துணைக்கோடல்
  • பெரியாரைப் பிழையாமை
  • பெருமை
  • பேதைமை
  • பொச்சாவாமை
  • பொருள்செயல்வகை
  • பொறையுடைமை
  • பொழுதுகண்டிரங்கல்
  • மக்கட்பேறு
  • மடியின்மை
  • மன்னரைச் சேர்ந்தொழுதல்
  • மருந்து
  • மானம்
  • மெய்யுணர்தல்
  • வரைவின்மகளிர்
  • வலியறிதல்
  • வான்சிறப்பு
  • வாய்மை
  • வாழ்க்கைத் துணைநலம்
  • வினைசெயல்வகை
  • வினைத்திட்பம்
  • வினைத்தூய்மை
  • விருந்தோம்பல்
  • வெஃகாமை
  • வெகுளாமை
  • வெருவந்தசெய்யாமை

Website Developed, Designed and Maintained by Sa.GokulDeepak (SaGo)