வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
மு.வ உரை:
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
பரிமேலழகர் உரை:
மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் – மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின் – அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின்.
(கோல் செவ்விதாயவழியே ‘வேல் வாய்ப்பது என்பார், ‘வேல் அன்று’ என்றார். ‘மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ (புறநா.55) என்றார் பிறரும். ‘கோடான்’ என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க).
உரை:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
மணக்குடவர் உரை:
அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின். இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.
Transliteration:
vaelandru vendri tharuvadhu mannavan
koaladhoounG koataa thenin
Translation:
Not lance gives kings the victory,
But sceptre swayed with equity.
Explanation:
It is not the javelin that gives victory, but the king’s sceptre, if it do no injustice.
மறுமொழி இடவும்