நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
மு.வரதராசனார் உரை:
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) பசந்து பனி வாரும் கண் – பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் – நமமால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன; இனி நீ ஆற்றல் வேண்டும். (சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். ‘நயந்தவர்க்கு’ என்று பாடம் ஓதுவாரும் உளர்.).
உரை:
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.
சாலமன் பாப்பையா உரை:
பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!.
மணக்குடவர் உரை:
முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள். இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பசப்பு நிறமடைந்து நீர் பொழுகின்ற கண்கள் தம்மால் அன்பு செய்யப்பட்டவரது அன்பில்லாத் தன்மையினைப் பிறர்க்குச் சொல்லுவனபோல் இருக்கின்றன.
Transliteration:
nayandhavar nalkaamai solluva poalum
pasandhu panivaarum kan
Translation:
The eye, with sorrow wan, all wet with dew of tears,
As witness of the lover’s lack of love appears.
Explanation:
The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More