தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

மு.வரதராசனார் உரை:

ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

பரிமேலழகர் உரை:

தெய்வத்தான் ஆகாது எனினும் – முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் – முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது. (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.).

உரை:

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

மணக்குடவர் உரை:

புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.

Transliteration:

theyvaththaan aakaa theninum muyaRchidhan
meyvaruththak kooli tharum

Translation:

Though fate-divine should make your labour vain;
Effort its labour’s sure reward will gain.

Explanation:

Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.

View Comments

  • மேற்கண்ட எந்த விளக்கமும் சரியானது அல்ல. ஏனெனில் முயற்சி என்பது முயற்சி and முயலுதல் என பொருள்படும். ஆங்கிலத்தில் practice. மீண்டும் முயலுதல். மீண்டும் மீண்டும் முயலும் முயற்சி செய்யும் ஒருவன்/ ஒருத்தி கடவுளை நம்ப தேவை இல்லை. இது தான் உண்மையான விளக்கம். முயற்சிக்கும் எவரும் தெய்வத்தை நம்ப தேவை இல்லை இதுதான் கரு பொருள்

    • உங்கள் கருத்தை பதிவு செய்ததிற்கு நன்றி.
      'அகதெனினும்' என்று திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ள வார்த்தையை தாங்கள் கவனிக்கவில்லையா?

  • //மெய் வருத்த// என்பது தவறு. மாறாக, **மெய் வருந்த** என்பதுதான் சரியானது.
    வெறுமனே, நாம் நமது உடலை வருத்தினால், கூலி கிடைக்காது.
    மெய் வருந்த முயற்சி செய்தால் மட்டும்தான் கிடைக்கும்.

Share

Recent Posts

குறள் 1330

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1329

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1328

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More

7 வருடங்கள் ago

குறள் 1327

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More

7 வருடங்கள் ago

குறள் 1326

உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More

7 வருடங்கள் ago

குறள் 1325

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More

7 வருடங்கள் ago