• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar

Thirukkural

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்
Home » அருளுடைமை » குறள் 232

குறள் 232

By Thiruvalluvar Leave a Comment

குறள் 232:

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

மு.வரதராசனார் உரை:

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

பரிமேலழகர் உரை:

உரைப்பார் உரைப்பவை எல்லாம் – உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் – வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம். (புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்(புறநா.27) அவற்றுள் ‘உரைப்பார் உரைப்பவை’ என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும்,இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும், படவே ‘பாடுவார் பாடுவன எல்லாம் “புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்’ என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.).

உரை:

போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.

சாலமன் பாப்பையா உரை:

சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

மணக்குடவர் உரை:

சொல்லுவார் சொல்லுவனவெல்லாம் இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

உலகத்தில் பெருமையாகச் சொல்லுபவர்கள் சொல்லுபவையெல்லாம் வறுமையால் இரப்பவர்களுக்கு (யாசிப்பவர்களுக்கு) ஈதலினைச் செய்வதனால் ஒருவற்கு உண்டாகும் புகழேயாகும்.

Translation:

The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown.

Explanation:

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.

Filed Under: புகழ்

Reader Interactions

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Primary Sidebar

பால்

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்

இயல்

  • அறத்துப்பால்
    • பாயிரவியல்
    • இல்லறவியல்
    • துறவறவியல்
    • ஊழியல்
  • பொருட்பால்
    • அரசியல்
    • அமைச்சியல்
    • அரணியல்
    • கூழியல்
    • படையில்
    • நட்பியல்
    • குடியியல்
  • காமத்துப்பால்
    • களவியல்
    • கற்பியல்

அதிகாரம்

  • அடக்கமுடைமை
  • அன்புடைமை
  • அமைச்சு
  • அரண்
  • அருளுடைமை
  • அறன்வலியுறுத்தல்
  • அறிவுடைமை
  • அலரறிவுறுத்தல்
  • அழுக்காறாமை
  • அவர்வயின்விதும்பல்
  • அவாவறுத்தல்
  • அவையஞ்சாமை
  • அவையறிதல்
  • ஆள்வினையுடைமை
  • இகல்
  • இடனறிதல்
  • இடுக்கணழியாமை
  • இனியவைகூறல்
  • இன்னாசெய்யாமை
  • இரவச்சம்
  • இரவு
  • இறைமாட்சி
  • இல்வாழ்க்கை
  • ஈகை
  • உட்பகை
  • உறுப்புநலனழிதல்
  • உழவு
  • ஊக்கமுடைமை
  • ஊடலுவகை
  • ஊழ்
  • ஒப்புரவறிதல்
  • ஒற்றாடல்
  • ஒழுக்கமுடைமை
  • கடவுள் வாழ்த்து
  • கண்ணோட்டம்
  • கண்விதுப்பழிதல்
  • கனவுநிலையுரைத்தல்
  • கயமை
  • கல்லாமை
  • கல்வி
  • கள்ளாமை
  • கள்ளுண்ணாமை
  • காதற்சிறப்புரைத்தல்
  • காலமறிதல்
  • குடிசெயல்வகை
  • குடிமை
  • குறிப்பறிதல் – காமத்துப்பால்
  • குறிப்பறிதல் – பொருட்பால்
  • குறிப்பறிவுறுத்தல்
  • குற்றங்கடிதல்
  • கூடாநட்பு
  • கூடாவொழுக்கம்
  • கேள்வி
  • கொடுங்கோன்மை
  • கொல்லாமை
  • சான்றாண்மை
  • சிற்றினஞ்சேராமை
  • சுற்றந்தழால்
  • சூது
  • செங்கோன்மை
  • செய்ந்நன்றி அறிதல்
  • சொல்வன்மை
  • தகையணங்குறுத்தல்
  • தனிப்படர்மிகுதி
  • தவம்
  • தீ நட்பு
  • தீவினையச்சம்
  • துறவு
  • தூது
  • தெரிந்துசெயல்வகை
  • தெரிந்துதெளிதல்
  • தெரிந்துவினையாடல்
  • நடுவு நிலைமை
  • நட்பாராய்தல்
  • நட்பு
  • நன்றியில்செல்வம்
  • நலம்புனைந்துரைத்தல்
  • நல்குரவு
  • நாடு
  • நாணுடைமை
  • நாணுத்துறவுரைத்தல்
  • நினைந்தவர்புலம்பல்
  • நிறையழிதல்
  • நிலையாமை
  • நீத்தார் பெருமை
  • நெஞ்சொடுகிளத்தல்
  • நெஞ்சொடுபுலத்தல்
  • பகைத்திறந்தெரிதல்
  • பகைமாட்சி
  • பசப்புறுபருவரல்
  • படர்மெலிந்திரங்கல்
  • படைச்செருக்கு
  • படைமாட்சி
  • பண்புடைமை
  • பயனில சொல்லாமை
  • பழைமை
  • பிரிவாற்றாமை
  • பிறனில் விழையாமை
  • புகழ்
  • புணர்ச்சிமகிழ்தல்
  • புணர்ச்சிவிதும்பல்
  • புறங்கூறாமை
  • புலவி
  • புலவி நுணுக்கம்
  • புலான்மறுத்தல்
  • புல்லறிவாண்மை
  • பெண்வழிச்சேறல்
  • பெரியாரைத் துணைக்கோடல்
  • பெரியாரைப் பிழையாமை
  • பெருமை
  • பேதைமை
  • பொச்சாவாமை
  • பொருள்செயல்வகை
  • பொறையுடைமை
  • பொழுதுகண்டிரங்கல்
  • மக்கட்பேறு
  • மடியின்மை
  • மன்னரைச் சேர்ந்தொழுதல்
  • மருந்து
  • மானம்
  • மெய்யுணர்தல்
  • வரைவின்மகளிர்
  • வலியறிதல்
  • வான்சிறப்பு
  • வாய்மை
  • வாழ்க்கைத் துணைநலம்
  • வினைசெயல்வகை
  • வினைத்திட்பம்
  • வினைத்தூய்மை
  • விருந்தோம்பல்
  • வெஃகாமை
  • வெகுளாமை
  • வெருவந்தசெய்யாமை

Website Developed, Designed and Maintained by Sa.GokulDeepak (SaGo)