தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
மு.வ உரை:
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
பரிமேலழகர் உரை:
தேறினும் தேறாவிடினும் – பகவைனை முன் தௌ¤ந்தானாயினும் தௌ¤ந்திலனாயினும்: அழிவின்கண் தேறான் பகான்விடல் – தனக்குப புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. (முன் ‘தௌ¤ந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக’ என்றது,. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, ‘தௌ¤ந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக’ என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.).
உரை:
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டு இருப்பதே நலமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.
மணக்குடவர் உரை:
பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தௌ¤யலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தௌ¤வதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக. இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.
Transliteration:
ThaeRinum thaeRaa vitinum azhivin-kaN
thaeRaan pakaaan vidal
Translation:
Whether you trust or not, in time of sore distress,
Questions of diff’rence or agreement cease to press.
Explanation:
Though (one’s foe is) aware or not of one’s misfortune one should act so as neither to join nor separate (from him).
மறுமொழி இடவும்