உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
மு.வரதராசனார் உரை:
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) என் நெஞ்சு – என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக – காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி – முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? (‘உள்ளம்’ என்புழி ‘அம்’ பகுதிப் பொருள் விகுதி. ‘நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை.
உரை:
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?.
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?.
மணக்குடவர் உரை:
என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என் நெஞ்சமே! காதலர் உள்ளத்திலேயே இருக்கின்றார். இப்போது வெளியில் போய்த் தேடி யாரிடம் செல்கின்றாய்?.
Transliteration:
ullaththaar kaadha lavaraal ulli-nee
yaaruzhaich cheriyaen nenju
Translation:
My heart! my lover lives within my mind;
Roaming, whom dost thou think to find?.
Explanation:
O my soul! to whom would you repair, while the dear one is within yourself?.
மறுமொழி இடவும்