• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar

Thirukkural

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்
Home » நாணுத்துறவுரைத்தல் » குறள் 1043

குறள் 1043

By Thiruvalluvar Leave a Comment

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

மு.வரதராசனார் உரை:

வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

பரிமேலழகர் உரை:

நல்குரவு என்னும் நசை – நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் – தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும். (நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். ‘குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்’ (மணி.11-76) என்றார் பிறரும். தோலாவது ‘இழுமென் மொழியால் விழுமியது நுவறல்’ (தொல். பொருள். செய்யுள் .239) என்றார் தொல்காப்பியனாரும். இதற்கு ‘உடம்பு’ என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் உடம்பு கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.).

உரை:

ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.

மணக்குடவர் உரை:

தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப் படுகின்ற ஆசைப்பாடு. நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால் ஆசையாயிற்று. தொல்- ஆகுபெயர். இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது.

Transliteration:

tholvaravum thoalum kedukkum thokaiyaaka
nalkuravu ennum nasai

Translation:

Importunate desire, which poverty men name,
Destroys both old descent and goodly fame.

Explanation:

Hankering poverty destroys at once the greatness of (one’s) ancient descent and (the dignity of one’s) speech.

Filed Under: நல்குரவு

Reader Interactions

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Primary Sidebar

பால்

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்

இயல்

  • அறத்துப்பால்
    • பாயிரவியல்
    • இல்லறவியல்
    • துறவறவியல்
    • ஊழியல்
  • பொருட்பால்
    • அரசியல்
    • அமைச்சியல்
    • அரணியல்
    • கூழியல்
    • படையில்
    • நட்பியல்
    • குடியியல்
  • காமத்துப்பால்
    • களவியல்
    • கற்பியல்

அதிகாரம்

  • அடக்கமுடைமை
  • அன்புடைமை
  • அமைச்சு
  • அரண்
  • அருளுடைமை
  • அறன்வலியுறுத்தல்
  • அறிவுடைமை
  • அலரறிவுறுத்தல்
  • அழுக்காறாமை
  • அவர்வயின்விதும்பல்
  • அவாவறுத்தல்
  • அவையஞ்சாமை
  • அவையறிதல்
  • ஆள்வினையுடைமை
  • இகல்
  • இடனறிதல்
  • இடுக்கணழியாமை
  • இனியவைகூறல்
  • இன்னாசெய்யாமை
  • இரவச்சம்
  • இரவு
  • இறைமாட்சி
  • இல்வாழ்க்கை
  • ஈகை
  • உட்பகை
  • உறுப்புநலனழிதல்
  • உழவு
  • ஊக்கமுடைமை
  • ஊடலுவகை
  • ஊழ்
  • ஒப்புரவறிதல்
  • ஒற்றாடல்
  • ஒழுக்கமுடைமை
  • கடவுள் வாழ்த்து
  • கண்ணோட்டம்
  • கண்விதுப்பழிதல்
  • கனவுநிலையுரைத்தல்
  • கயமை
  • கல்லாமை
  • கல்வி
  • கள்ளாமை
  • கள்ளுண்ணாமை
  • காதற்சிறப்புரைத்தல்
  • காலமறிதல்
  • குடிசெயல்வகை
  • குடிமை
  • குறிப்பறிதல் – காமத்துப்பால்
  • குறிப்பறிதல் – பொருட்பால்
  • குறிப்பறிவுறுத்தல்
  • குற்றங்கடிதல்
  • கூடாநட்பு
  • கூடாவொழுக்கம்
  • கேள்வி
  • கொடுங்கோன்மை
  • கொல்லாமை
  • சான்றாண்மை
  • சிற்றினஞ்சேராமை
  • சுற்றந்தழால்
  • சூது
  • செங்கோன்மை
  • செய்ந்நன்றி அறிதல்
  • சொல்வன்மை
  • தகையணங்குறுத்தல்
  • தனிப்படர்மிகுதி
  • தவம்
  • தீ நட்பு
  • தீவினையச்சம்
  • துறவு
  • தூது
  • தெரிந்துசெயல்வகை
  • தெரிந்துதெளிதல்
  • தெரிந்துவினையாடல்
  • நடுவு நிலைமை
  • நட்பாராய்தல்
  • நட்பு
  • நன்றியில்செல்வம்
  • நலம்புனைந்துரைத்தல்
  • நல்குரவு
  • நாடு
  • நாணுடைமை
  • நாணுத்துறவுரைத்தல்
  • நினைந்தவர்புலம்பல்
  • நிறையழிதல்
  • நிலையாமை
  • நீத்தார் பெருமை
  • நெஞ்சொடுகிளத்தல்
  • நெஞ்சொடுபுலத்தல்
  • பகைத்திறந்தெரிதல்
  • பகைமாட்சி
  • பசப்புறுபருவரல்
  • படர்மெலிந்திரங்கல்
  • படைச்செருக்கு
  • படைமாட்சி
  • பண்புடைமை
  • பயனில சொல்லாமை
  • பழைமை
  • பிரிவாற்றாமை
  • பிறனில் விழையாமை
  • புகழ்
  • புணர்ச்சிமகிழ்தல்
  • புணர்ச்சிவிதும்பல்
  • புறங்கூறாமை
  • புலவி
  • புலவி நுணுக்கம்
  • புலான்மறுத்தல்
  • புல்லறிவாண்மை
  • பெண்வழிச்சேறல்
  • பெரியாரைத் துணைக்கோடல்
  • பெரியாரைப் பிழையாமை
  • பெருமை
  • பேதைமை
  • பொச்சாவாமை
  • பொருள்செயல்வகை
  • பொறையுடைமை
  • பொழுதுகண்டிரங்கல்
  • மக்கட்பேறு
  • மடியின்மை
  • மன்னரைச் சேர்ந்தொழுதல்
  • மருந்து
  • மானம்
  • மெய்யுணர்தல்
  • வரைவின்மகளிர்
  • வலியறிதல்
  • வான்சிறப்பு
  • வாய்மை
  • வாழ்க்கைத் துணைநலம்
  • வினைசெயல்வகை
  • வினைத்திட்பம்
  • வினைத்தூய்மை
  • விருந்தோம்பல்
  • வெஃகாமை
  • வெகுளாமை
  • வெருவந்தசெய்யாமை

Website Developed, Designed and Maintained by Sa.GokulDeepak (SaGo)